முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு நண்பன் இருந்தால்!!

நண்பர்கள் தினமான இன்று 'ஒரு நண்பன் இருந்தால்'  பாடலை என் நண்பர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்!

ஒரு நண்பன் இருந்தால்
ஒரு நண்பன் இருந்தால்
கையோடு பூமியை சுமந்திடலாம்
தொடு வானம் பக்கமே
தொட வேண்டும் நண்பனே!!





நம் பேரில் திசைகளை எழுதலாம்
கடலில் நதிகள் பெயர் கலந்தது
இந்த நட்பில் எங்கள் உயிர் கலந்தது
நட்பு என்பது எங்கள் முகவரி
இது வாழ்கை பாடதில் முதல் வரி
இந்த உலகில் மிக பெரும் ஏழை
நண்பன் இல்லாதவன் ஹேய்

(ஒரு நண்பன் இருந்தால்...)

தோழ் மீது கை போட்டு கொண்டு
தொன்றியதெல்லாம் பேசி ஊரை சுற்றி வந்தோம் வந்தோம்
ஒருவர் வீட்டிலே படுது தூங்கினோம் நட்பின்
போர்வைக்குள்ளே
இந்த காதல் கூட வாழ்க்கையில் அழகிலே தோன்றுமே

தோழன் என்ற சொந்தம் ஒன்று
தோன்றும் நமது உயிரோடு

(ஒரு நண்பன் இருந்தால்...)

நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் உள்ள
எண்ணங்கள் எண்ணகள் சொல்ல நண்பன் ஒரே சொந்தம்
நமது மேஜையில் உணவு கூட்டணி அதில் நட்பின் ருசி
அட வாழ்கை பயணம் மாறலாம் நட்பு தான் மாறுமா?
ஆயுள் காலம் தேர்ந்த நாளில்
நண்பன் முகம் தான் மறக்காதே!

(ஒரு நண்பன் இருந்தால்...)



பாடல் குறிப்புகள்:

திரைப்படம்: எனக்கு 20 உனக்கு 18
பாடகர்கள்: சின்மயி, S.P.B.சரண், வெங்கட்பிரபு
இசை: A R ரஹ்மான்
பாடல் ஆசிரியர்: பா. விஜய்

என்னைக் கவர்ந்த வரிகள்:
"இந்த உலகில் மிக பெரும் ஏழை
நண்பன் இல்லாதவன் ஹேய்"

எவ்வளவு உண்மையான வரிகள்! 

நன்றி: திரைப்பாடல்

கருத்துகள்

  1. ஹாய் அருண்!
    நண்பர்கள் தின பாடல் சமர்ப்பணம் நன்று!

    // "இந்த உலகில் மிக பெரும் ஏழை
    நண்பன் இல்லாதவன் ஹேய்" //

    உண்மையான வரிகள்!

    பதிலளிநீக்கு
  2. Comment code verification பகுதியை disable செய்யவும்.

    பதிலளிநீக்கு
  3. பிளாக்கர் டெம்ப்ளேட் ஐ மாற்றலாமே அருண்!

    பதிலளிநீக்கு
  4. நன்றி பாலாஜி..
    நீங்கள் கூறியபடி சரிபார்ப்பை நீக்கி விட்டேன்!!!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி...

வண்டி... வண்டி... ரயில் வண்டி

             என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது.  ரயிலில்  பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.    சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் பயன்படுத்துகிறனர்.    சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்? "ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி . அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன்.  ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?  ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்பட...

எங்கள் அப்பன்

2004 ஆம் ஆண்டு          என்னுடன் இயந்திரவியல் படித்த மாணவர்கள் அனைவராலும் இன்றும் எங்கள் சக தோழர் ஒருவர் " அப்பா " என்று அன்புடன் அழைக்கப்படுகிறார் . அவரை அனைவரும் தந்தை என்று அழைக்கும் படி என்ன செய்தார் ??? எல்லா வகுப்புகளையும் போல எங்கள் வகுப்பிலும் " மாப்ள பெஞ்ச் " உண்டு . அந்த பெஞ்சின் பிதாமகரே எங்க " அப்பன் " தான் !! ( பெயர் வேண்டாம் .. பட்டப்பெயரான ' அப்பன் ' என்றே வைத்துக் கொள்வோம் )    எங்கள் கணக்கு ஆசிரியர் விடுப்பில் சென்றிருந்தார் . அவருக்குப் பதிலாக புதிதாய் ஒரு ஆசிரியர் வந்தார் . வந்தவர் அப்போது தான் இளங்கலைப் பட்டம் பெற்று இருந்தார் . எங்கள் வகுப்புக்கு வந்தவுடன் , “ நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆக்கும் . என்கிட்ட ரொம்ப வாலாட்டாதீங்க " என்கிற ரீதியில் பேசினார் . ( அதை நாங்க யாரும் சட்டை செய்யவில்லை என்பது வேறு விஷயம் !) நேரே பலகைக்குப் போய் ஒரு கணக்கைப் போடத் துவங்கினார் . எப்போதும் போல எங்க மாப்ள " அப்பன் " பக்கத்தில் இருக்கும் நண்பனிடம் அரட்டை அடிக்க ஆரம்பித்தான் . புதிதாய் வந்...