முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்

என்றார் பாரதியார். பல மொழிகளைக் கற்று உணர்ந்த பாரதியால், தமிழ் மொழியின் இனிமையை உணர முடிந்தது. 


 தமிழ் மற்றும் தமிழரின் பெருமைகளை  ஒன்று முதல் எட்டு வரை பார்ப்போமா?

ஒரே மொழி:


'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே' உதித்த மூத்த மொழி நம் தமிழ் மொழி.
கி.மு 200 ஆம் ஆண்டிற்கு முன்னரேயே இலக்கணத்திற்கு என தனி நூல் (தொல்காப்பியம்) கொண்ட ஒரே மொழி நம் தமிழ் மொழி தான்!

இரு வாழ்க்கை:
தமிழர் தன் வாழ்க்கையை அகம், புறம் என இரு வகையாகப் பிரித்து வாழ்ந்தனர். இல்லத்தில் இருக்கும் அன்பும், காதலும் இயைந்த வாழ்க்கை அக வாழ்க்கை. வெளியே நடக்கும் வீரம், கொடை முதலிய கொண்ட வாழ்க்கை புற வாழ்க்கை.

முத்தமிழ்:
இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என மூன்று களங்களிலும் தமிழை வளர்த்தனர் தமிழர்.
இயல் என்பது எழுத்து மற்றும் பேச்சில் பயன்படுத்தப்படும் தமிழ்.  இசை என்பது பண் இசைத்துப் பாடப்படும் தமிழ். நாடகம் என்பது கூத்து மற்றும் ஆடலால் உணர்த்தப்படும் தமிழ்.

நான்மறை:
அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவை நான்கு உறுதிப் பொருட்களையும் அடையும் வகையில் வாழ்ந்தனர்  தமிழர் ஆகும்.

ஐந்நிலம்:
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்து நிலங்களிலும் தமிழ் வளர்ந்தது.


ஆறு பொழுதுகள்:

பண்டைய தமிழர் ஒவ்வொரு நாளையும், ஆண்டையும் ஆறு பொழுதுகளாய்ப் பிரித்திருந்தனர்.

 ஒரு நாளில் வரும் ஆறு பொழுதுகள் (சிறு பொழுது):


காலை 6 முதல் 10 மணி வரை
நண்பகல் 10 முதல் 14 மணி வரை
எற்பாடு 14 மணி முதல் 18 மணி வரை
மாலை 18 மணி முதல் 22 மணி வரை
யாமம் 22 மணி முதல் 2 மணி வரை
வைகறை (வைகுறு விடியல்)         2 மணி முதல் 6 மணி வரை

 ஒரு ஆண்டில் வரும் ஆறு பொழுதுகள் (பெரும்பொழுது):

இளவேனில்                           சித்திரை, வைகாசி
முதுவேனில் ஆனி, ஆடி
கார் ஆவணி, புரட்டாசி
கூதிர் (குளிர்) ஐப்பசி, கார்த்திகை
முன்பனி மார்கழி, தை
பின்பனி மாசி, பங்குனி

ஏழு திணை:
 தமிழர் தன் போர் வாழ்க்கையை ஏழு திணைகளாகப் பிரித்தனர். அவை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் ஆகியவை ஆகும்.

எட்டு மெய்ப்பாடுகள்:
 தமிழர் தம் உள்ளத்தில் ஏற்படும் உணர்ச்சிகளை எட்டு பெய்ப்பாடுகளாய்ப் பிரித்தனர். நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை ஆகிய எட்டு உணர்ச்சிகளையும் பல இலக்கியங்களில் வழி காணலாம்!


      தன் கல்லறையின் மீது "ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்"  என்று எழுத விருப்பம் கொண்டார் ஜி.யூ. போப். வேறு எந்த மொழியின் மீதும் யாரும் அவ்வளவு பற்று கொண்டதாய் வரலாறு இல்லை.

அத்தகு சிறப்பு மிக்க தமிழ்மொழியினை நம் தாய் மொழியாய்க் கொள்வதற்கு மிகவும் பெருமையாய் இருக்கிறது!

நண்பர்களே! இந்த பதிவினைப் பற்றிய உங்கள் பொன்னான கருத்துக்களை இங்கே பதியுங்கள்... மேன்மேலும் பதிவை மேம்படுத்த உதவுங்கள்! இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால், வலைத்திரட்டிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து, பிறரும் காண வழிசெய்திடுங்கள்!!
 


மடல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்

கருத்துகள்

  1. பாரதியாரின் கவிதையில் தொடங்கி தமிழ் மொழியின் சிறப்புகளையும், பயனுள்ள தகவல்களையும் பகிர்ந்தமைக்கு பாராட்டுகள்..!! வாழ்த்துகள்..!!

    தமிழுணர்வு கொண்ட ஒவ்வொரு தமிழனும் ஜி.யூ. போப் போன்றே தமிழ்ப்பற்றுக்கொண்டு, அத்தகைய எண்ணங்களை தம்முள்ளே வளர்த்துக்கொள்ள வேண்டும்.. !!! தமிழனாக பிறந்ததிற்குரிய அடையாளமாக அந்த எண்ணங்கள் மனதில் வேறூன்ற வேண்டும்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி அருண்!!!

    தமிழ் வாழ்க..! தமிழ் வளர்க..!!!

    பதிலளிநீக்கு
  2. தமிழை பற்றிய சிறப்புகள்.......
    தலைப்பும், கருத்தும் விளக்கங்களும் அருமை அருண்.....

    தொடர்க....... தமிழ் பெருமைகளை

    பதிலளிநீக்கு
  3. madhippirkkuriya avizhmadalukku en vanakkam thangalin thamizh padhivu nandraga irundhdhadhu nandri
    surendran

    பதிலளிநீக்கு
  4. தன் கல்லறையின் மீது "ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்" என்று எழுத விருப்பம் கொண்டார் ஜி.யூ. போப். வேறு எந்த மொழியின் மீதும் யாரும் அவ்வளவு பற்று கொண்டதாய் வரலாறு இல்லை.

    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  5. தமிழ் பற்றிய தகவல்கள் அருமையாக தொகுத்து தந்தீர்கள். நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  6. ஜி.யூ. போப்...,

    நிறைய பேறு மறந்த பெயர் ..., நினைவுபடுத்தியமைக்கு நன்றி நண்பரே ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஜி.யூ. போப்...,

      நிறைய பேறு மறந்த பெயர் //

      உண்மை தான்... அந்த பெயரைச் சொன்னால், அவர் எத்தனையாவது போப் என்று கேட்பவர்களும் உண்டு.

      நீக்கு
  7. தமிழுக்கு நான் செய்யும் சிறு தொண்டு இந்த பதிவின் லிங்க் ய் எனது தளத்திலும் இட்டுள்ளேன்.நன்றி நண்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே..
      காலம் தாழ்த்திய மறுமொழிக்கு மன்னிக்கவும்!

      நீக்கு

கருத்துரையிடுக

நீங்க என்ன சொல்றீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி...

வண்டி... வண்டி... ரயில் வண்டி

             என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது.  ரயிலில்  பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர்.    சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் பயன்படுத்துகிறனர்.    சரி, ரயிலைப் பற்றிய இந்த பதிவில் என்ன சொல்லப் போறேன்? "ரயில் இஞ்சின்" என்பதற்குத் தமிழாக்கம் தொடர் வண்டி இழுபொறி . அனைவரும் எளிதில் படிப்பதற்காக ரயில் இஞ்சின் என்றே எழுதுகிறேன்.  ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?  ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்பட...

எங்கள் அப்பன்

2004 ஆம் ஆண்டு          என்னுடன் இயந்திரவியல் படித்த மாணவர்கள் அனைவராலும் இன்றும் எங்கள் சக தோழர் ஒருவர் " அப்பா " என்று அன்புடன் அழைக்கப்படுகிறார் . அவரை அனைவரும் தந்தை என்று அழைக்கும் படி என்ன செய்தார் ??? எல்லா வகுப்புகளையும் போல எங்கள் வகுப்பிலும் " மாப்ள பெஞ்ச் " உண்டு . அந்த பெஞ்சின் பிதாமகரே எங்க " அப்பன் " தான் !! ( பெயர் வேண்டாம் .. பட்டப்பெயரான ' அப்பன் ' என்றே வைத்துக் கொள்வோம் )    எங்கள் கணக்கு ஆசிரியர் விடுப்பில் சென்றிருந்தார் . அவருக்குப் பதிலாக புதிதாய் ஒரு ஆசிரியர் வந்தார் . வந்தவர் அப்போது தான் இளங்கலைப் பட்டம் பெற்று இருந்தார் . எங்கள் வகுப்புக்கு வந்தவுடன் , “ நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆக்கும் . என்கிட்ட ரொம்ப வாலாட்டாதீங்க " என்கிற ரீதியில் பேசினார் . ( அதை நாங்க யாரும் சட்டை செய்யவில்லை என்பது வேறு விஷயம் !) நேரே பலகைக்குப் போய் ஒரு கணக்கைப் போடத் துவங்கினார் . எப்போதும் போல எங்க மாப்ள " அப்பன் " பக்கத்தில் இருக்கும் நண்பனிடம் அரட்டை அடிக்க ஆரம்பித்தான் . புதிதாய் வந்...