முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இப்படிக்கு..

"நான் யார்" என்ற கேள்விக்கு இன்று வரை என்னிடம் விடை இல்லை....
"நான்" என்கிற என்னை இந்த உலகம் இப்படித் தான் அழைக்கிறது: அருண்

என் பெற்றோர் எனக்கு இட்ட பெயர் இது!!
என் உற்ற நண்பர்கள் சிலர் தவிர பலர் என்னை அழைப்பதும் இந்த பெயரால் தான்...

ஆனால், "நான்" என்கிற நான் உண்மையில் யார்? விடை அறியேன்...

எனினும், தற்போது நான் புரிந்து கொண்ட நான் ...

உலக அரங்கில் பொறியியல் துறையில் ஒரு முத்திரை படைக்கும் "மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம்" கல்லணை உள்ள மாநகரில் பிறந்தவன்...

இன்று உலக அரங்கில் பொறியியல் துறையில் முத்திரை படைக்கும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவன்.

சோழர்கள் கோலோச்சிய நகரில் பிறந்து, சேரர்கள் ஆண்ட பகுதியில் கல்வி பயின்று , இன்று பாண்டியர் பூமியில் பணிபுரிபவன்!!!

தமிழ் கற்க ஆசைப்பட்டு வழியின்றி பொறியியல் கற்றவன்.. அதனால், அறிவியலையும் தமிழையும் இணைக்கும் பாலமாக விளங்க ஆசைப்படுபவன்.

கணிணியையும் தமிழ் பேச வைப்பவன்!!

செந்தமிழ் மொழியினன் - பாரத நாட்டினன்

மேற்கூறியவற்றின் தொகுப்பு தான்...
நானாகிய நான்

உங்கள் அன்புக்குரிய தோழன் ஆளுங்க என்கிற அருண் !!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மின்னஞ்சல் முகவரி (ஈமெயில் ஐடி- Email ID) உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி என்று சொல்லித்தரப் போறேன்..  " ஈமெயில் ஐடி உருவாக்கத் தெரியாதவன் தான் வந்து உன் பிளாகைப் படிக்கிறானாக்கும்?" "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. ஆனா, இது ரொம்ப தப்பு!!" "தெரியாத்தனமா நீ நல்லா (??!!) எழுதுறன்னு நினைச்சு படிக்க வந்துட்டேன்.. அதுக்காக இப்படியா?" எல்லாரும் கொஞ்சம் பொறுங்க!!!! பிளாஷ்பேக் போகணும்னா ரொம்ப தேவையானது.......... கொசுவர்த்தி சுருள்... அதைப் பத்த வைக்கிறதுக்குள்ள இப்படியா!! இப்ப கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா!! ************** 2004 ஆம் ஆண்டு..   பொதிகையின் எதிரொலி நிகழ்ச்சியில் வந்த மடல்களைப் பிரித்து படித்து கொண்டிருந்தனர். அதில் வந்திருந்த ஒரு மடலை மிகவும் ஆர்வமாகப் படித்தார் தொகுப்பாளினி. "பொதிகையில் வரும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிகழ்ச்சியில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என செயல்முறைப் படுத்திக் காட்டினால் என் போன்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்"  "நல்ல விஷயம். அடுத்த நிகழ்ச்சியில் இதைச் செயல்படுத்தப் பார்க்கி...

நாசாவுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறு ? (நம்பாதீங்க - பகுதி 2)

நம்பாதீங்க - பகுதி 2 முன்குறிப்பு: இந்த பதிவின் நோக்கம் உண்மையை உரைப்பதே. எந்த மதத்தையும் நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கமல்ல!! இது "நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!" பற்றிய கதை!! கதை இதோ: இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு, வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும...

செவ்வாய் கிரகத்தில் கியூரியோசிட்டி தரையுளவி [Curiosity Rover]

  நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய கியூரியோசிட்டி  தரையுளவி (Curiosity  Rover) வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் கால் பதித்தது. 06 ஆகஸ்ட் 2012 அன்று கேல் எரிமலைப்பள்ளத்தாக்கில்(Gale Crater) இறங்கியது. அதன் சிறப்பம்சம் என்ன? எப்படி செவ்வாயின் பரப்பை அடைந்தது? அதன் திட்டக் நோக்கம் என்ன? என்ன விதமான ஆய்வுகளை மேற்கொள்ளப் போகிறது? செவ்வாயில் உயிர்கள் இருப்பைப் பற்றி எதுவும் கண்டறியுமா? சமீபத்தில், நமது 'பிளாகர் நண்பன்' அப்துல் பாஸித் அவர்கள் செவ்வாய் கிரகத்திலிருந்து பேஸ்புக் அப்டேட் என்கிற பதிவினை எழுதியிருந்தார். அதனைப் படித்து வெற்றிகரமாக செயல்படுத்தி விட்டனர்  நாசா விஞ்ஞானிகள். நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய Curiosity என்கிற தரையுளவி (Rover) வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் கால் பதித்ததாம். புது இடமாச்சே.. அங்கு போன அந்த வண்டி படமா எடுத்து தள்ளுதாம். அந்த படங்களை செவ்வாய் கிரகத்தில் இருந்து புதிது புதிதாக அப்லோட் செய்கிறதாம்.. அதாவது செவ்வாய் கிரகத்தில் இருந்து தனது ஸ்டேடஸை அப்டேட் செய்கிறதாம் (பேஸ்புக்கில் அல்ல!) !!    ...